Skip to main content

HOW TO REMOVE RAHU DOSHA (IN TAMIL)?

"COMPLETE GUIDE TO REMOVE RAHU DOSHA (DETAILS GIVEN IN TAMIL)":

ராகுவிற்கு பரிஹாரம் செய்வது எப்படி?

1. உகந்த கிழமை: ஞாயிறு, சனி, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை.

2. உகந்த நக்ஷத்ரம்: திருவாதிரை , சுவாதி மற்றும் சதயம்.

3. உகந்த நேரம்: ராகு காலம். 

வழிபாட்டு முறை:

1. கருப்பு  முழு உளுந்து எடுத்து கொள்ளவும்.

2. நெய் விளக்கில் உள்ளே உளுந்தினை போட்டு விளக்கினை ஏற்றலாம்.

3. உளுந்தினை கிழே பரப்பி அதன் மீது நெய் விளக்கு ஏற்றலாம்.

4. நாக தெய்வங்களுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்யலாம்.

5.கருப்பு முழு உளுந்தினை சுண்டலாக செய்து ராகுவிற்கு நிவேதினம் செய்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யலாம்.

6. கருப்பு உளுந்து சாதம் செய்யலாம்.

7. ராகுவின் காயத்ரி மந்திரம் 9/27/81/108 முறை ஜெபம் செய்வது மிகுந்த பலன் தரும்.

8. கருப்பு உளுந்து எடுத்து கருப்பு காகிதம் மற்றும் துணியில் மடித்து சட்டை பையில் வைத்து .கொள்ளவும். பெண்கள் சேலையில் முடிச்சிட்டு வைத்து கொள்ளவும்.(உடம்புடன் இருப்பது மிகவும் அவசியம்).

9. சனி கிழமை சூரிய உதயத்தில் இருந்து மறுநாள் ஞாயிறு சூரிய உதயம் வரை வைத்திருக்க வேண்டும். (உடல் மற்றும் மனது சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம்).

10. அன்றைய கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் நல்லது.

11. இதுபோல் 9 அல்லது கூடுதல் சனி கிழமை நாட்களில் செய்ய வேண்டும்.

12. 9 அல்லது கூடுதலான பாக்கெட்களையும் ஒன்றாக சேர்த்து சாமி அறையில் வைக்க வேண்டும்.

13. மறு சனிகிழமை அல்லது எதாவது ஒரு சனிகிழமை புனித நதிக்கரைக்கு சென்று 9 அல்லது அதற்கு மேல் உள்ள பாக்கெட்களையும் ஒன்றாக சேர்த்து தலையை சுற்றி ஓடும் தண்ணிரில் எரிய வேண்டும்.

14. திரும்பி பார்க்காமல் வீட்டிற்க்கு வர வேண்டும்.

15. தலைக்கு நன்றாக ஸ்நானம் செய்து விட்டு பின்பு சிவன் கோவில்க்கு செல்ல வேண்டும்.

16. பிள்ளையார், சிவன், பார்வதி மற்றும் ராகுவிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

17. சிவன் பார்வதிக்கு அபிஷேகம் செய்வது மிக, மிக நன்று.

18. ராகுவிற்கு அபிஷேகம் செய்து சந்தன அலங்காரம் செய்வித்து கருப்பு வஸ்திரம் சாத்தி கருப்பு முழு உளுந்து படைத்தது வரும் பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தல் மிகவும் நல்லது.

19. ஊனமுற்ற நபர்களுக்கு முடிந்த அளவு  உதவி செய்வது மிக நன்று.

20. குடி மற்றும் போதைக்கு ஆளான நபர்களால் சீரழிந்த குடும்பத்திற்கு முடிந்த அளவு உதவி செய்வது மிக நல்லது.

21. போதைக்கு அடிமையான  நபர்களுக்கு அந்த எண்ணம் ஏற்படாதவகையில் பொறுமையுடன் பேசி அன்புடன் நடந்து கொண்டு அவர்களை அதில் இருந்து காப்பாற்றினால் ராகுவின் மிகப்பெரிய கொடிய தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

Comments