"METHOD OF REMOVING PITRA DOSHA GIVEN IN TAMIL LANGUAGE"
பித்ரு தோஷம் போக்குவது எப்படி ?
பித்ரு தோஷம் போக்குவது எப்படி ?
1. கிழக்கு அல்லது தெற்கு நோக்கி அமரவும்.
2. பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும்/
3. காலை ஆறு மணி அளவில் செய்ய வேண்டும்.
4. உடம்பு, மனம் தூய்மையாக இருக்க வேண்டும்.
5. மனதில் விநாயகரை வணங்க வேண்டும்.
6. பின்பு இறந்த முன்னோர்களை மனதில் அன்புடன் தியானிக்க வேண்டும்.
7. நம்முடைய குறைகளை மன்னித்து நாம் அளிக்கும் தர்பணத்தை எற்று கொள்ளும்மாறு வேண்டிக்கொள்ளவும்.
8. வலது உள்ளங்கையில் கருப்பு எள்ளினை எடுத்து கொள்ளவும்.
9. பாத்திரத்தில் இருந்து சிறிய அளவு தண்ணீரை எடது கையினால் கரண்டி மூலம் எடுத்து வலது உள்ளங்கையில் இருக்கும் எள்ளின் மீது ஊற்ற வேண்டும்.
10. வானத்தை நோக்கி இறந்த முன்னோர்களை அழைத்து நாம் கொடுக்கும் இந்த தர்பணத்தை ஏற்று கொள்ளுமாறு வேண்டவேண்டும்.
11. பின்பு தண்ணீருடன் உள்ள எள்ளினை வலது கையில் உள்ள ஆள்காட்டி விரல் மற்றும் பெரிய விரல் நடுவில் விழும்படி நமது கையினை வலது பக்கமாக சாய்க்க வேண்டும்.
12. கிழே விழும் தண்ணீர் மற்றும் எள் நமது கைக்கு அடியில் வைத்திருக்கும் தாம்பாளத்தில் விழும்மாறு பார்த்து கொள்ள வேண்டும்.
13. இதை மூன்று முறை செய்ய வேண்டும்.
14. பின்பு தாம்பாளத்தில் உள்ள எள் மற்றும் தண்ணீரை கால் படாத இடத்தில் உற்ற வேண்டும்.
15. கருப்பு எள் முளை விடாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். முடிந்தவரை ஓடும் தண்ணீரில் போடுவது நல்லது.
16. பெண்கள் செய்தால் வெள்ளை எள் உபயோக படுத்த வேண்டும்.
17. தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் அந்த இடத்தில் சிறிய மாக்கோலம் போடவும்.
18. இது முடிந்த பின்னர் சாப்பிடலாம்.
மற்றொரு முறை:
19. தாம்பாளத்தில் பச்சரிசி சாதம் செய்து அதன் மீதும் எள்ளை போடலாம்.
20. பின்பு எள்ளை சாதத்துடன் கலந்து காகம்/பசு மாடுவிற்கு கொடுக்கலாம்.
21. பசு மாட்டிற்கு வாழைக்காய், வெல்லம் கலந்த அரிசி, அகத்தி கீரை மற்றும் சக்கரை பொங்கல் கொடுக்கலாம்.
22. இதை தினந்தோறும் செய்வது நல்லது.
23. இல்லை என்றல் மாதம் முதல் நாள், அமாவசை மற்றும் முன்னோர் இறந்த திதியினை கணக்கிட்டு மாதத்திற்கு 3 முறையாவது செய்ய வேண்டும்.
குறிப்பு :
1. எவர்சில்வர், இரும்பு, பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் பீங்கான் உபயோக்கிக்க கூடாது.
2. மணி அடித்து கும்பிட கூடாது.
3. சுத்தம் இல்லாமல் செய்ய கூடாது.
4. அன்பும் உண்மையான பாசமும் நமக்கு முன்னோர்களின் ஆசியை விரைவில் பெற்று தரும்.
For more on Pitra Dosha, please visit www.pithrudosham.blogspot.in
Comments
Post a Comment