"COMPLETE GUIDE FOR DELETING KETHU DOSHA (GIVEN IN TAMIL):
கேதுவிற்கு பரிஹாரம் செய்வது எப்படி?
கேதுவிற்கு பரிஹாரம் செய்வது எப்படி?
1. உகந்த கிழமை: ஞாயிறு, சனி, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை.
2. உகந்த நக்ஷத்ரம்: அஸ்வினி, மகம் மற்றும் மூலம்.
3. உகந்த நேரம்: யம கண்டம் காலம்.
வழிபாட்டு முறை:
1. கொள்ளு பயறினை 7/16/25 எடுத்து கொள்ளவும்.
2. நெய் விளக்கில் உள்ளே கொள்ளு பயறினை போட்டு விளக்கினை ஏற்றலாம்.
3. கொள்ளு பயறினை கிழே பரப்பி அதன் மீது நெய் விளக்கு ஏற்றலாம்.
4. நாக தெய்வங்களுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்யலாம்.
5. கொள்ளு பயறினை சுண்டலாக செய்து ராகுவிற்கு நிவேதினம் செய்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யலாம்.
6. கொள்ளு பயறினை வைத்து சாதம் செய்யலாம்.
7. கேதுவின் காயத்ரி மந்திரம் 9/27/81/108 முறை ஜெபம் செய்வது மிகுந்த பலன் தரும்.
8. 25/34/43/52 கொள்ளு பயறினை எடுத்து பல வண்ண காகிதம் மற்றும் துணியில் மடித்து சட்டை பையில் வைத்து .கொள்ளவும். பெண்கள் சேலையில் முடிச்சிட்டு வைத்து கொள்ளவும்.(உடம்புடன் இருப்பது மிகவும் அவசியம்).
9. ஞாயிற்று கிழமை சூரிய உதயத்தில் இருந்து மறுநாள் திங்கள் கிழமை சூரிய உதயம் வரை வைத்திருக்க வேண்டும். (உடல் மற்றும் மனது சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம்).
10. அன்றைய கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் நல்லது.
11. இதுபோல் 9 ஞாயிற்று கிழமை செய்ய வேண்டும்.
12. 9 பாக்கெட்களையும் ஒன்றாக சேர்த்து சாமி அறையில் வைக்க வேண்டும்.
13. மறு ஞாயிற்றுகிழமை அல்லது எதாவது ஒரு ஞாயிற்றுகிழமை புனித நதிக்கரைக்கு சென்று 9 பாக்கெட்களையும் ஒன்றாக சேர்த்து தலையை சுற்றி ஓடும் தண்ணிரில் எரிய வேண்டும்.
14. திரும்பி பார்க்காமல் வீட்டிற்க்கு வர வேண்டும்.
15. தலைக்கு நன்றாக ஸ்நானம் செய்து விட்டு பின்பு சிவன் கோவில்க்கு செல்ல வேண்டும்.
16. பிள்ளையார், சிவன், பார்வதி மற்றும் கேதுவிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
17. சிவன் பார்வதிக்கு அபிஷேகம் செய்வது மிக, மிக நன்று.
18. கேதுவிற்கு அபிஷேகம் செய்து சந்தன அலங்காரம் செய்வித்து பல வண்ண வஸ்திரம் சாத்தி கொள்ளு பயறினை படைத்தது வரும் பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தல் மிகவும் நல்லது.
19. விஷம் அருந்திய நபர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்வது மிக நன்று.
20. தற்கொலை செய்த நபர்களால் சீரழிந்த குடும்பத்திற்கு முடிந்த அளவு உதவி செய்வது மிக நல்லது.
21. தற்கொலை எண்ணம் உள்ள நபர்களுக்கு அந்த எண்ணம் ஏற்படாதவகையில் பொறுமையுடன் பேசி அன்புடன் நடந்து கொண்டு அவர்களை அதில் இருந்து காப்பாற்றினால் கேதுவின் மிகப்பெரிய கொடிய தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.
Comments
Post a Comment